
தேசிய பத்திரிகை தினத்தையொட்டி காணொளியில் உரையாற்றிய மத்திய சுற்றுச்சூழல், தகவல் மற்றும் ஒளிபரப்பு, கனரக தொழில்கள் மற்றும் பொது நிறுவனங்கள் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "பொறுப்புள்ள சுதந்திரத்தைக் கடைப்பிடிப்பது ஊடகங்களின் கடமை. அரசு உங்களை நம்புகையில், நீங்களும் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும். ஓ.டி.டி தளங்களைக் கட்டுப்படுத்த விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.
மேலும், ஓ.டி.டி தளங்களைக் கட்டுப்படுத்த பிரஸ் கவுன்சில், தனியாகக் கட்டுப்பாடு அமைப்பு என எதுவும் இல்லை. ஓ.டி.டி தளங்களைக் கட்டுப்படுத்துவதற்காக தனி அமைப்பை உருவாக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. டி.ஆர்.பி முறைகேடு விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியதால் நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. நிபுணர்கள் குழு வழங்கும் பரிந்துரையின் பேரில் டி.ஆர்.பி விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்". என்றார்.