Skip to main content

பாஜக அலுவலகங்களுக்கு இஸ்லாமியர்கள் வரக்கூடாது: பாஜக எம்.எல்.ஏ.,சர்ச்சை பேச்சு!

Published on 08/06/2018 | Edited on 08/06/2018
basanagowda-pati

 

 

பாஜக அலுவலகங்களுக்கு இஸ்லாமியர்கள் வரக்கூடாது என கர்நாடக பாஜக எம்.எல்.ஏ பாசனகவுடா பாடிலின் தெரிவுத்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. பாசனகவுடா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது, இஸ்லாமியர்கள் நலனுக்கு யாரும் பணியாற்ற வேண்டாம். மக்களால் தேர்வு செய்யப்படும் பிரதிநிதிகள் இந்துகளுக்காக மட்டுமே பணியாற்ற வேண்டும். இஸ்லாமியர்களுக்காக யாரும் பணியாற்றக் கூடாது. நம்மை ஆட்சியில் அமர வைத்தவர்கள் இந்துக்களே, இஸ்லாமியர்கள் இல்லை.

என் அலுவலகத்திற்குள் புர்கா அணிந்தவர்கள் மற்றும் தாடி வைத்தவர்கள் யாரும் வரக் கூடாது என்று என்னுடைய ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறினார். மேலும் பாஜக அலுவலகங்களுக்கு இஸ்லாமியர்கள் வரக்கூடாது என கூறியுள்ளார். பாசன்கவுடாவின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்