இங்கிலாந்து நாட்டை மையமாக கொண்டு இயங்கி வரும் ரியாக்ஷன் இன்ஜினீயர் லிமிடெட் நிறுவனம் 'ஹைப்பர் சோனிக்' விமானம் ஒன்றை தயாரித்து வருகிறது. இந்த விமானம் ஒரு மணி நேரத்தில் சுமார் 38800 மைல்களை கடக்கும். இந்த திட்டம் வெற்றிக்கரமாக முடியும் போது மும்பையில் இருந்து லண்டனிற்கு சுமார் 1 மணி நேரத்தில் செல்ல முடியும். அதே போல் இந்தியாவில் இருந்து அமெரிக்கா போன்ற மற்ற நாடுகளுக்கு நேரடியாகவும் எளிதாகவும் பயணம் மேற்கொள்ளலாம்.

எனவே இந்த திட்டம் வெற்றி பெற்று பயணம் மேற்கொள்ள உலகில் உள்ள அனைத்து மக்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இருப்பினும் இந்த விமானம் செயல்பாட்டிற்கு வர இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். ஆனால் மற்ற விமானத்தை காட்டிலும் இந்த விமானத்தின் கட்டணம் அதிகமாக இருக்கும். ஆனால் பயண நேரம் கருத்தில் கொண்டு அதிக பயணிகள் 'ஹைப்பர் சோனிக்' விமானத்தில் பயணம் செய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த விமானத்தில் சோதனை ஓட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது .