இந்தியாவின் கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி தற்போது ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராகியுள்ளார். இதற்கு முன் ஆசியாவின் பணக்காரராக இருந்து வந்த அலிபாபா நிறுவனத்தின் ஜேக் மாவை பின்னுக்குத்தள்ளி அந்த இடத்தை பிடித்திருக்கிறார் முகேஷ் அம்பானி.
ப்ளூம்பெர்க் பில்லியனர் இண்டக்ஸ் என்ற ஆய்வின் படி, ஜேக் மாவின் நிறுவனம் இந்த ஆண்டு 44 பில்லியன் சம்பாரித்துள்ளது. அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமோ இவருடைய நிறுவனத்தை விட 0.3 பில்லியன் அதிகமாக சம்பாரித்து, ஆசியாவின் பெரிய பணக்காரராகியுள்ளார். அதாவது, ஜேக் மா முப்பதுலட்சத்தி பதிமூணாயிரம் கோடி சம்பாரித்துள்ளார். இவரை விட அம்பானி இருபதாயிரம் கோடி அதிகம் சம்பாரித்துள்ளார்.
இந்த ஆண்டு ஜேக் மாவின் நிறுவனத்திற்கு 1.4 பில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதேபோல அம்பானி அவரது ஜியோ நிறுவனத்தை மேலும் உயர்த்த, 4 பில்லியன் சேர்த்திருக்கிறார்.