Published on 27/08/2018 | Edited on 27/08/2018
![thambidhurai](http://image.nakkheeran.in/cdn/farfuture/mm0z3DuHnrYMrqJw80WwIzYoJRa_PiT6oOKX5Srx-FA/1535387344/sites/default/files/inline-images/thambidurai-aiadmk_0.jpg)
வருகின்றன நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அனைத்து கட்சிகளிடமும் ஆலோசனை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் இன்று அழைப்புவிடுத்திருந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 7 தேசியக்கட்சிகள் மற்றும் 51 மாநில காட்சிகள் கலந்துகொண்டது.
இந்நிலையில்," வாக்காளர் பட்டியலை சரியாக முறையில் தயாரிக்க வேண்டும்" என்று அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தினோம் என்று அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை பேட்டியளித்தார். பின்னர்,பாஜகவும் திமுகவும் நெருங்குவதால் அதிமுகவுக்கு கவலையில்லை என்றும் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
சென்னையில் 30 ஆம் தேதி ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறவுள்ள, மறைந்த திமுக தலைவர் கலைஞரின் நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கவுள்ள நிலையில் தம்பிதுரை இவ்வாறு கூறியுள்ளார்.