Skip to main content

சபரிமலைக்கு வரும் ஐய்யப்ப பக்கர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Published on 17/09/2018 | Edited on 17/09/2018
sa2


          
கேரளாவில் பெய்த கன மழையால் பல மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. அது போல் பம்பை மற்றும் சபரிமலை சன்னிதானமும் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை கேரளா  அரசும் தேவஸ்தானமும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 


    இந்த நிலையில் புரட்டாசி மாதம் எப்பொழுதும் சன்னிதானம் திறந்து  இருக்கும். அதற்காக ஐய்யப்ப பக்தர்களும்  மாலை போட்டு ஐய்யப்பனை தரிசிக்கவருவது வழக்கம்  அதுபோல்  இந்த புராட்டாசிக்கு ஐய்யப்ப பக்தர்கள் வர இருப்பதால் சன்னிதானத்தில் உள்ள தேவஸ்தானத்திலிருந்து ஐய்யப்ப பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டு இருக்கிறார்கள்.  அதை பக்தர்கள் கடை பிடித்து கொண்டு ஐய்யப்பனை தரிசிக்க வருமாறு கேட்டுக் கொள்கிறார்கள்.  

 

sa3


அதாவது ஐய்யப்பனை தரிக்க வரும்   பக்தர்கள்  தனியார் வாகனங்களில் வந்தால் நிலக்கல் வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.    அதுபோல் நிலக்கல்-பம்பா  கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்துகள் கிடைக்கும்.  நிலக்கல்லிலேயே பம்பா வரை போய் வர கூப்பன்கள் வாங்க வேண்டும்‌.   பேருந்தில் நடத்துநர் கிடையாது.  அதன் பின் பம்பை வந்தடைந்தபின் த்ரிவேணி பாலம் மற்றும் அய்யப்பன் பாலம் வழியாக சர்வீஸ் சாலை அடைய வேண்டும். 

 

அங்கிருந்து ஆஸ்பத்திரி வழியாக கணபதி கோவில் வந்தடைய வேண்டும்.   பம்பையாற்றின் மேலான நடை பாலம் மூடப்பட்டுள்ளது. அதனால்    த்ரிவேணி முதல் ஆராட்டுக்கடவு வரை அதிக இடங்களில் மண்சரிவும் ஏற்பட்டுள்ளது மற்றும் மண் ஈரமாக உள்ளதால் பதக்தர்கள் யாரும் மண்ணில் இறங்கி நடக்கக் கூடாது.    


 பம்பையில் ஒரு பக்கம் குளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.     பக்தர்கள் தங்கள் முறை வரும் வரை காத்திருக்க வேண்டும். வேறு எங்கும் ஆற்றில் இறங்கக் கூடாது.   பக்தர்கள் அங்கிருக்கும் செக்யுரிட்டிகள்  கூறும் விதி முறைகளை பின்பற்ற வேண்டும்.  பம்பா போலீஸ் ஸ்டேஷன் எதிர்ப்புறம் உள்ள ஹில்டாப் பார்க்கிங் பழுதடைந்துள்ளது. ‌அங்கு யாரும் செல்லக்கூடாது .    

 

sand


பம்பா பெட்ரோல் பங்க் பக்கத்தில் உள்ள சுவர் த்ரிவேணி முதல் ஆராட்டுக்கடவு வரை இடிந்துள்ளது.  யாரும் இவ்விடங்களுக்குச் செல்லக்கூடாது.      நிறைய பாம்புகள் உள்ளன.  முக்கியமாக காட்டுப்பகுதியில் ஜாக்கிரதையாக இருக்கவும். இல்லை என்றால்  பாம்புகள் மூலம் பக்தர்கள்  உயிருக்கு கூட ஆபத்து ஏற்படும்.

 

 தடை விதிக்கப்பட்டுள்ள   பகுதிக்கு யாரும் செல்லக்கூடாது.   குடி நீர் எடுத்துச் செல்லவும்.    ப்ளாஸ்டிக் பாட்டில் தவிர்க்கவும். பம்பையில் ப்ளாஸ்டிக் தடை செய்யப் பட்டுள்ளது.   இருமுடியில் ப்ளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது.       சாப்பாடு மற்றும் உணவு வகைகள் நிலக்கல்லில் கிடைக்கும்.  தங்களுக்கு வேண்டிய உணவை தாங்கள் எடுத்துச் செல்லலாம்.        

          

வெள்ளத்தினால் நீரின் ஆதாரங்கள் மூடப்பட்டுள்ளது. இதனால் நீர் பற்றாக்குறை உள்ளது.  பக்தர்கள் குறைந்த அளவு நீர் உபயோகப் படுத்த வேண்டும். வீணாக்கக் கூடாது.   நிலக்கல்லில் பயோ டாய்லெட்டில் உள்ளன.   பழைய டாய்லெட்டுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதால் உபயோகிக்க முடியாது. நிலக்கல் தாண்டி டாய்லெட் வசதிகள் குறைவு. இதை  எல்லாம் பக்தர்கள் கடைபிடித்து  வந்து  ஐய்யப்பனை தரிசித்து விட்டு பக்தர்கள் செல்ல வேண்டும்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சபரிமலை கோவில் நடை திறப்பு!

Published on 10/04/2021 | Edited on 10/04/2021

 

kerala state sabarimala temple opening peoples

 

தமிழ்ப் புத்தாண்டு, விஷு பண்டிகையை முன்னிட்டு, கேரளா மாநிலத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற சபரிமலை கோவிலில் நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக ஏப்ரல் 18- ஆம் தேதி வரை ஐயப்பன் கோவில் நடை திறந்திருக்கும் எனத் திருவாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

 

நாளை (11/04/2021) வழக்கம்போல், காலை 05.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்புப் பூஜை உள்ளிட்டவை நடைபெறும். நாளை (11/04/2021) ஏப்ரல் 18- ஆம் தேதி வரை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களில் தினமும் 10,000 பேருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. கரோனா நெகட்டிவ் சான்றுடன் வரும் பக்தர்கள் மட்டுமே சபரிமலை கோயிலில் அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்; சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பக்தர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

Next Story

சபரிமலையில் அணையா ஆழி தீ அணைந்தது... பக்தா்கள் அதிர்ச்சி!!!

Published on 21/11/2020 | Edited on 21/11/2020

 

 

சபரிமலையில் சமீப காலமாக நடக்கக்கூடாத சில சம்பவங்கள் நடந்து வருவதாக கூறும் பக்தர்கள், கன்னட நடிகை ஜெயமாலா கோவில் கருவறைக்குள் சென்று ஐயப்பா சாமி விக்கிரகத்தை தொட்டு வணங்கினேன் என்று கூறி சா்ச்சையை ஏற்படுத்தியது. அதன் பிறகு அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்று நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியதை தொடா்ந்து அதனால் சில பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயன்றபோது அதனை தடுத்து நிறுத்த பக்தா்கள் முயன்ற போது ஏற்பட்ட பல சம்பவங்கள் என சிலவற்றை கூறினர். 

 

தற்போது கரோனா பாதிப்பால் சபரிமலை செல்லும் பக்தா்களுக்கு விதிக்கபட்ட கட்டுப்பாடுகளில் பக்தா்கள் விரதம் இருந்து கொண்டு செல்லும் நெய்யை கொண்டு நெய் அபிஷேகம் செய்வது நிறுத்தப்பட்டது. மேலும் நாள் முமுக்க 24 மணி நேரமும் அணையா காட்சி தரும் ஆழி தீ அணைந்தது. இவை இரண்டும் சபரிமலை வரலாற்றில் முதல் முறையாக இந்த ஆண்டு நடந்துள்ளது. இதனால் பக்தா்கள் மன வருத்தம் அடைந்தியிருப்பதுடன் தேவசம் போர்டும் அதிர்ச்சியடைந்துள்ளது.

 

இதுகுறித்து குமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்த ஐயப்பா குருசாமி சிதம்பரம் கூறும்போது, 40 ஆண்டுகளாக விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்கிறேன். ஆயிரக்கணக்கான பக்தா்களுக்கு குருசாமியாக இருந்து வழி நடத்தி சென்றியிருக்கிறேன். பக்தா் ஒருவா் விரதம் இருந்து தேங்காயில் நிரப்பும் நெய் அது வெறும் நெய் மட்டுமல்ல அந்த பக்தரின் கஷ்டம், துக்கம், நஷ்டம், நோய், வேதனை என எல்லாத்தையும் கலந்து தான் நிரப்புகிறான். அதை ஐயப்பா சாமியின் உடம்பில் ஊற்றி விட்டு கடைசியில் அதை சுமந்து சென்ற தேங்காயை ஆழி தீயில் இட்டு எறிவார்கள். 

 

இந்த ஆழி தீயை மண்டல மகர காலத்தில் நடை திறக்கும் அன்று கோவில் மேல் சாந்தி கற்பூரத்தால்  பற்ற வைப்பார். இந்த ஆழி தீ மண்டல மகர காலம் முடிந்து நடை அடைக்கும் அன்றைய நாள்  வரை அணையாமல் எரிந்து கொண்டே இருக்கும்.    

 

18-ம் படிக்கு கீழே இடது பக்கத்தில் காணப்படும் ஆழிக்கும் தனியாக ஆழி பூஜை நடத்தப்படும். இதனால்தான் சரணம் கோஷத்தில் கூட ஆழிக்குடையவனே என்று கூறுகிறார்கள். இந்த நிலையில் ஆழி தீ அணைந்து இருப்பது அதிர்ச்சியை மட்டுமல்ல வேதனையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

 

ஆழி தீ அணைந்தது குறித்து தேவசம் போர்டு அதிகாரிகள் கூறும்போது, கரோனாவால் சில கட்டுபாடுகள் விதிக்கபட்டதால் பக்தா்களின் வருகை மிக மிக குறைந்ததால் ஆழி தீயில் தேங்காய் இல்லை இதனால்தான் ஆழி தீ அணைந்தது என்றனர்.