Skip to main content

நாட்டின் பொருளாதாரம் 13.5% வளர்ச்சி - மத்திய அரசு

Published on 01/09/2022 | Edited on 01/09/2022

 

The country's economy grew by 13.5%; Central government

 

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம்  13.5% ஆக வளர்ந்துள்ளதாகத் தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

 

கடந்த நான்கு ஆண்டுகளில் இதுதான் அதிகபட்ச வளர்ச்சி என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய மத்திய நிதித்துறை செயலாளர் டி.வி.சோமநாதன் "கொரோனா காலத்திற்கு முன்பு இருந்ததை விட 4% கூடுதல் வளர்ச்சியை நாடு பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார். 2022- 2023ம் ஆண்டில் வளர்ச்சி 7% ஆக இருக்கும் என்றும் நிதிப்பற்றாக்குறையை 6.4% என்ற வரம்பிற்குள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார். இதற்கிடையே நிலக்கரி மின்சாரம் போன்ற ஆதாரத்துறைகளில் உற்பத்தி வளர்ச்சி விகிதம் 6 மாதங்களில் இல்லாத அளவு குறைந்து 4.5% தொட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

ஆனால் ரிசர்வ் வங்கி முதல் காலாண்டில் கணித்திருந்த 16.4% என்பதைவிட தற்போதைய வளர்ச்சி குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்