குஜராத் மாநிலம் மோர்பியில் சத்பூஜைக்காக ஆற்றைக் கடந்து கேபிள் பாலத்தில் மக்கள் சென்றபோது இடிந்து விழுந்து விபத்துக்கு உள்ளானது. ஆற்றில் மூழ்கிய பலரை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
ஆற்றில் விழுந்தவர்களைத் தேடும் பணி தொடர்ந்து 2ஆவது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 142 ஆக உயர்ந்துள்ளது. இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். படுகாயம் அடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நான்கு லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் படுகாயம் அடைந்தோருக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என குஜராத் மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இது தொடர்பாக குற்றவியல் வழக்கு பதியப்பட்டு விசாரணையும் துவக்கப்பட்டுள்ளது. விபத்து நிகழ்ந்த இந்த பாலமானது கடந்த ஐந்து நாட்களுக்கு முன்புதான் புனரமைக்கப்பட்டு திறக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தகுந்தது.
மேலும்,குஜராத்தில் விரைவில் தேர்தல் வரவுள்ளதால் அம்மாநிலத்தில் பரப்புரையில் ஈடுபட மோடி சென்றுள்ளார். பிரதமர் மோடி இன்று அகமதாபாத்தில் சாலைப் பேரணி நடத்த திட்டமிட்டு இருந்தார். விபத்தைத் தொடர்ந்து பேரணி ரத்து செய்யப்பட்டுள்ளது.