இந்தியாவில் கரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டது தொடர்பாகப் பல அடுக்கடுக்கான கேள்விகளைப் பிரதமர் மோடிக்கு முன்வைத்துள்ளார் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்.
இந்தியாவில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாகக் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போதும், கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கரோனா பாதிப்பு உச்சத்தை அடைந்துள்ளது. இந்தச் சூழலில், கரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டது தொடர்பாகப் பல அடுக்கடுக்கான கேள்விகளைப் பிரதமர் மோடிக்கு முன்வைத்துள்ளார் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம். இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், "நான்கு மணி நேரத்தில் திடீரென நாடு முழுவதும் முழு ஊரடங்கு அறிவித்தது- சரியான முடிவா?
ரயில் இன்றி, பேருந்து இன்றி பல லட்சம் மக்கள் பல நாறு கிலோமீட்டர்கள் நடந்தே தமது சொந்த ஊர்களை அடைந்தார்களே - இது சரியான முடிவின் விளைவா?
பல கோடி குறு, சிறு, நடுத்தர தொழில்கள் மூடப்பட்டு இன்னும் தொடங்கப்படாமல் இருக்கின்றனவே - இது சரியான முடிவுகளின் பயனா?
ஊரடங்கு விதிகளைத் தளர்த்திய பிறகும் வேலையிழந்த கோடிக்கணக்கானவர்கள் இன்னும் வேலையில்லாமல் இருக்கிறார்களே - இது சரியான முடிவுகளின் பயனா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.