முகமது ஜின்னாவின் மகள் டினா வாடியா உயிர்நீத்தார்!
முகமது அலி ஜின்னாவின் ஒரே மகளான டினா வாடியா நியூநார்க் நகரில் நேற்று உயிர்நீத்தார். அவருக்கு வயது 98.

முகமது அலி ஜின்னாவின் மகளும், தொழிலதிபர் நஸ்லி வாடியாவின் தாயாருமான டினா வாடியா நியூயார்க்கில் அவரது இன்னொரு மகளான டயானாவின் வீட்டில் நேற்று உயிரிழந்துள்ளார். அவரது குடும்பத்தின் சார்பில் அளிக்கப்பட்ட அறிக்கையில், அவர் இயற்கை மரணம் எய்தினார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டு தனது அப்பாவின் வீடான ஜின்னா ஹவுஸில் தனது கடைசி காலத்தைக் கழிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும், அவரது அப்பா வெளியேற்றப்பட்டவரின் சொத்து என எந்த உயிலும் எழுதி வைக்கவில்லை. எனவே, அந்த வீடு தனக்கு சொந்தமானது என தெரிவித்திருந்தார்.
டினா வாடியாவின் காதலை ஜின்னா ஏற்க மறுத்ததாகவும், அவர் நெவில்லி வாடியாவை திருமணம் செய்த பின்னர் தன்னிடம் இருந்து விலக்கி வைத்திருந்தார் எனவும் ஷீலா ரெட்டி தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். கடைசி காலத்தை ஜின்னா ஹவுஸில் கழிக்கவேண்டும் என்ற அவரது ஆசை நிறைவேறாமலேயே போனது.