Published on 14/09/2018 | Edited on 14/09/2018
![modi](http://image.nakkheeran.in/cdn/farfuture/4KtPUvsjm0CD7_oRS_tPQ3CNnC2EOBldh6gV8J48tN8/1536928958/sites/default/files/inline-images/modi_34.jpg)
மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள இந்தூரில் துவாதி போரா இசுலாமிய சமுகத்தினரின் மசுதியில் மொஹரம் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்துகொண்டுள்ளார். அவருடன் அந்த மாநிலத்தின் முதல்வர் சிவராஜ் சிங்கும் கலந்துகொண்டுள்ளார். மேலும், போரா இனத்தின் ஆண்மிக தலைவரான சையத்னா முப்படால் சைப்புதின் தலைமையில் இவ்விழா நடைபெற்றது.
இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி,” இமாம் ஹுசைனின் புனிதச்செய்திகளை உங்கள் மனதில் இறங்கும் அளவிற்கு பொருத்திக்கொண்டு, அதை உலகம் முழுவதும் பரப்புகிறீர்கள். இமாம் அமைதியையும் நீதியையும் கடைப்பிடித்ததால் அவர் கொல்லப்பட்டார். அநீதிக்கு எதிராக குரல் கொடுத்தார். அவர் கற்றுக்கொடுத்த இந்த பாடம் முன்பைவிட தற்போதுதான் தேவைப்படுகிறது ” என்றார்.