Published on 31/07/2020 | Edited on 31/07/2020
புதிய கல்விக் கொள்கை குறித்து நாட்டு மக்கள் முன் நாளை உரையாற்றுகிறார் பிரதமர் மோடி.
கடந்த 34 ஆண்டுகளாகக் கல்விக்கொள்கையில் மாற்றம் ஏதும் செய்யப்படாமல் இருந்த சூழலில், கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழுவின் பரிந்துரைகளின் பெயரில், இந்தியக் கல்விக்கொள்கையை மாற்றியமைத்துள்ளது மத்திய அரசு. அதன்படி புதிய கல்விக் கொள்கை அறிவிப்புகளை மத்திய அரசு அண்மையில் வெளியிட்டது. இந்நிலையில் புதிய கல்விக் கொள்கை குறித்து நாட்டு மக்கள் முன் நாளை உரையாற்ற உள்ளார் பிரதமர் மோடி. நாளை மாலை 4:30 மணிக்கு மக்களிடம் உரையாற்றும் பிரதமர் மோடி, புதிய கல்விக் கொள்கையின் சிறப்பு அம்சங்கள் குறித்து விளக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.