Published on 28/12/2020 | Edited on 28/12/2020

இந்தியாவில் கரோனா ஊரடங்கை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
புதிய கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தொடர்ச்சியான சரிவு காணப்பட்டாலும், உலகளவில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, இங்கிலாந்தில் உருவான புதிய வகை கரோனா ஆகியவற்றை கருத்தில் கொண்டு கண்காணிப்பு, கட்டுப்பாடு மற்றும் எச்சரிக்கையை பராமரிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதால் கரோனா ஊரடங்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக செயல்படுத்தப்படும் எனவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.