கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், தனியார் மற்றும் அரசு கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஜேஇஇ தேர்வு, நீட் தேர்வு, பள்ளித்தேர்வுகள், கல்லூரி பருவத் தேர்வுகள், சிவில் சர்வீஸ் தேர்வுகள், அரசுப்பணிக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. மேலும் தேர்வுக்கான புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று (05/05/2020) மாணவர்களுடன் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் காணொளி காட்சி மூலம் கலந்துரையாடினார். அப்போது "மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு (NEET EXAM) ஜுலை மாதம் 26 ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் ஜூலை மாதம் 18,20,21,22,23 ஆகிய தேதிகளில் ஜேஇஇ மெயின் தேர்வு (JEE MAIN EXAM) நடத்தப்படும் என்றும், ஜேஇஇ அட்வான்ஸ்டு (JEE ADVANCED EXAM) தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறும். அதேபோல் சிபிஎஸ்சி 10 ஆம் வகுப்பு மற்றும் 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும்" என்றார்