ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் ஆளுநர் ஆச்சார்ய தேவ், வெளிநாட்டு பசுக்களின் பாலை பருகுவது மனிதர்களுக்கு கெடுதலை விலைவிக்கும். அதுதான் கோபத்தையும், இரத்தக் கொதிப்பையும் மனிதர்களுக்கு தருகிறது என்று கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
ஹிந்துதர்மத்திலுள்ள பசுக்களின் முக்கியத்துவம் என்னும் தலைப்பில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், அவருடைய சொந்த கிராமத்தில் தனது 200 ஏக்கர் நிலத்தில் 300 பசுக்களை வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். மாட்டின் சானம் முதல் கோமியம் வரை பயன்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார். இவர் சானத்தை உரமாக பயன்படுத்தும் முறை வெற்றியடைந்ததால், அதை விவசாயிகளுக்கும் கற்றுத்தர அரசாங்கத்தை அணுகியிருப்பதாக கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம்,” உங்கள் மாநிலத்தில் இருக்கும் பசுக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள்” என்று கூறியுள்ளார்.