Skip to main content

வாகன ஓட்டிகளுக்கு நடனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாணவி

Published on 19/11/2019 | Edited on 19/11/2019


மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தை சேர்ந்தவர் இளம்பெண் சுபி ஜெயின் . இவர் புனேவில் உள்ள தனியார் கல்லூரியில் எம்பிஏ படித்து வருகிறார்.  தனது பட்டப்படிப்பின் ஒரு அங்கமான இன்டர்ன்ஷிப் எனப்படும் பகுதி நேர நிகழ்ச்சியில் 15 நாட்களுக்கு வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் தன்னார்வலராக செயல்பட விரும்பினார்.  இதையடுத்து இந்தூர் பகுதி போலீஸ் கூடுதல் ஆணையரை அணுகிய சுபி ஜெயின், தனது விருப்பத்தை கூறினார். மாணவியின் வேண்டுகோளை ஏற்ற ஆணையர், சுபி ஜெயினுக்கு டிராபிக் போலீஸ் உடை வழங்கி 15 நாட்கள் இந்தூர் சாலையில் விழிப்புணர்வை ஏற்படுத்த அனுமதி அளித்தார்.

 


இதையடுத்து, டிராபிக் போலீஸ் உடையில் மாணவி சுபி ஜெயின், சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிதல், சீட் பெல்ட்கள் அணிதல் போன்ற போக்குவரத்து விதிகளின் முக்கியத்துவதை தனது அழகான நடனம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.  மேலும், சாலை விதிகளை பின்பற்றும் வாகன ஓட்டிகளுக்கு அவர் தனது நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார். தனது இந்த முயற்சிக்கு இந்தூர் வாகன ஓட்டிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாக சுபி ஜெயின் தெரிவித்துள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்