மத்திய பிரதேச மாநிலம் போபால் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்கை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிடுபவர் பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்கூர். இவர் மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டு பின்பு ஜாமீனில் இருக்கும் இவர் பாஜக சார்பாக களமிறங்கியுள்ளார். சமீப காலமாக இவர் கூறும் கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இவர் பேட்டி ஒன்றில் தான் சாபம் விட்டதால் தான் தீவிரவாத ஒழிப்பு படை அதிகாரி கர்கரே தீவிரவாத தாக்குதலில் இறந்தார் என்று கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இதே மாதிரி நேற்று பிரச்சாரத்தின் போது மாட்டிறைச்சி இந்து மதத்திற்கு எதிரானது என்றும் அதை சாப்பிடுபவர்கள் இந்துக்களாக இருக்க மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார் .மேலும் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் நாடு முழுவதும் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதனையடுத்து கோவாவில் மாட்டிறைச்சிக்கு அனுமதி கொடுக்கப்பட்டதால் தான் அம்மாநில முதல்வராக இருந்த மனோகர் பரிக்கருக்கு புற்றுநோய் வந்து உயிர் போனதாகவும், அவர் பசுவை மதிக்கவில்லை அதனால தான் அவருக்கு அந்த தண்டனையை பெற்றார் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.