பா.ஜ.க. சார்பில் இந்தியாவில் முதன்முறையாகப் பிரதமராகப் பொறுப்பேற்றவர் அடல் பிகாரி வாஜ்பாய். 1924ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ம் தேதி மத்தியப் பிரதேசம் மாநிலம், குவாலியர் பகுதியில் பிறந்தவர் அடல் பிகாரி வாஜ்பாய். இவர் 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார். ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்த தினமான டிசம்பர் 25 ஆம் தேதி வாஜ்பாயின் நல்லாட்சி தினமாக அனுசரிக்கப்படுகிறது. அடல் பிகாரி வாஜ்பாய்க்கு கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்தது.
கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் தேதி முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்யின் பிறந்தநாள் அன்று பிரதமர் மோடி, உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் அவருக்கு அமைக்கப்பட்ட 25 அடி உயர சிலையைத் திறந்து வைத்தார். ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்தநாளான டிச. 24ம் தேதி பா.ஜ.க.வினர் சிறப்பாகக் கொண்டாடுவர். பா.ஜ.க.வை தாண்டி மாற்றுக் கட்சியினருடனும் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் நல்ல நட்புறவை மேற்கொண்டார். இதன் காரணமாக மாற்றுக் கட்சியினரும் அவருக்கு மரியாதை செய்வர்.
இந்த வருடம் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்யின் பிறந்த தினமான டிச. 24ம் தேதி நல்லாட்சி தினமாக இந்தியா முழுவதும் பாஜக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பான அறிக்கையை பா.ஜ.க. தலைமை வெளியிட்டுள்ளது. முன்னாள் பிரதமரான அடல் பிகாரி வாஜ்பாய்யின் வாழ்க்கை வரலாறு படமாகவும் தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்திற்கு ‘மெயின் அடல் ஹூன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படம் வரும் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 19ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.