Skip to main content

லாலு பிரசாத் யாதவ்வுக்கு ஆறு வாரங்கள் நிபந்தனை ஜாமீன்!

Published on 11/05/2018 | Edited on 11/05/2018

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ்வுக்கு, ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் ஆறு வாரங்கள் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

 

lalu

 

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், தனது ஆட்சிக்காலத்தில் மாட்டுத்தீவண ஊழல் வழக்கில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டார். இதுதொடர்பான வழக்குகளில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பளித்தது. 

 

இதையடுத்து, லாலு பிரசாத் யாதவ் பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையில் உடல்நிலைக் கோளாறு காரணமாக ரிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து கிளம்பிய நிலையில், வரும் மே 12ஆம் தேதி தனது மகனின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக மூன்று நாள் பரோல் வழங்கியது சிறை நிர்வாகம்.

 

இந்நிலையில், லாலுவுக்கு ஆறு வாரங்கள் நிபந்தனை ஜாமீன் வழங்கி ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது உடல்நிலை குறித்து அவர் சார்பில் அளிக்கப்பட்ட மனுவிற்கு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்