பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்ப்பட்டு துறை அமைச்சர் மேனகாகாந்தி திருநங்கைகளை பற்றி கூறிய சர்ச்சை கருத்துக்கு ட்விட்டரில் மன்னிப்பு கோரியுள்ளார்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் மேனகா காந்தி நேற்று மக்களவையில் ஆட்கடத்தல் தொடர்பான விவாதத்தில் பேசிய பொழுது திருநங்கை என்று குறிப்பிட்ட வேண்டிய இடத்தில் ''அதர்ஸ்'' மற்றவர்கள் என குறிப்பிட்டு சற்று கேலியாக புன்னகைத்தார் இதனால் எம்.பிக்கள் அனைவரும் சிரித்தனர்.
I sincerely apologise for using the term ‘other ones’ during the debate on the Trafficking of Persons (Prevention, Protection and Rehabilitation) Bill, 2018, in Lok Sabha. I did not ‘snigger’, I was embarrassed at my own lack of knowledge.
— Maneka Gandhi (@Manekagandhibjp) July 30, 2018
மேனகா காந்தியின் இந்த செயல் திருநங்கைகள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி அவருக்கு கண்டனங்கள் வலுத்தது. இதனை அறிந்த மேனகா காந்தி ட்விட்டரில் மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் '' தனக்கு அந்த இடத்தில் திருநங்கை என குறிப்பிடுவதற்கான சரியான வார்த்தை தெரியவில்லை எனவே அப்படி நடந்துவிட்டது அதற்காக தான் மன்னிப்பு கோருவதாக குறிப்பிட்டுள்ளார்.