ஆண்டுதோறும் செப். 22ஆம் தேதி உலகம் முழுவதும் காண்டாமிருக தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. உலக அளவில் வேட்டையாடப்படும் விலங்குகளில் ஒன்று காண்டாமிருகம். காண்டாமிருகத்தின் கொம்புகள் மருத்துவ குணம் கொண்டவை என்ற தவறான புரிதல் காரணமாக தொடர்ச்சியாக கொடூரமாக காண்டாமிருகங்கள் வேட்டையாடப்படுகிறது.
இந்நிலையில், நேற்று (22.09.2021) அசாம் மாநிலத்தில் சுமார் 2,500 காண்டாமிருக கொம்புகள் ஒன்றாக வைத்து கொளுத்தப்பட்டது. காண்டாமிருகத்தின் கொம்புகளில் மருத்துவக் குணம் இல்லை, காண்டாமிருகங்களை வேட்டையாடுவது காட்டுமிராண்டித்தனமானது என்பதை உணர்த்துவதற்காக காண்டாமிருக கொம்புகளை எரிக்கும் நிகழ்வை ஏற்பாடு செய்ததாக அசாம் அரசு தெரிவித்துள்ளது. போகோகட் பகுதியில் பொதுவெளியில் வைத்து அரசின் வசம் இருந்த சுமார் 2,500 காண்டாமிருக கொம்புகள் அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் எரியூட்டப்பட்டன.