Published on 23/01/2021 | Edited on 23/01/2021
![Mamata refuses to speak on PM's platform](http://image.nakkheeran.in/cdn/farfuture/BeB2fWbz3P08VS10275No10tK3keMOWxjNgqRgGWXME/1611404533/sites/default/files/inline-images/xxdgsdgds_0.jpg)
கொல்கத்தாவில் நடைபெற்று வரும் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 125வது பிறந்த நாள் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். அதே விழாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கலந்துகொண்டுள்ளார்.
இந்நிலையில் பிரதமர் மோடி கலந்து கொண்ட அந்த விழாவில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மேடையில் பேச மறுப்பு தெரிவித்துள்ளார். மேடையில் பேச வருவதற்குமுன் கூட்டத்தில் இருந்து 'ஜெய்ஸ்ரீராம்' என்ற கோஷம் ஒலித்ததால், மம்தா பேச மறுப்பு தெரிவித்துள்ளார்.