Skip to main content

சி.பி.எஸ்.இ. புத்தகத்தில் முகலாயர் பற்றிய பாடம் நீக்கம்!

Published on 28/04/2025 | Edited on 28/04/2025

 

CBSE removes lesson on Mughals from textbook

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) புதிய தேசிய கல்வி கொள்கைப்படி 7ஆம் வகுப்புக்கான சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதாவது  சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் 7ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் உள்ள வாரலாற்றுப் பகுதியில் இடம்பெற்றிருந்த முகலாயர், சுல்தான் அரசுகள் பற்றிய பாடங்களை புத்தகங்களில் இருந்து என்.சி.ஆர்.டி. நீக்கியுள்ளது.

அதற்கு பதிலாக மகதா மற்றும் மௌரியா பேரரசுகள் உள்ளிட்ட பண்டைய இந்திய சாம்ராஜ்யங்கள் குறித்த குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன எனத் தகவல் வெளியாகியுள்ளது. சி.பி.எஸ்.சி. பள்ளி பாடப் புத்தகத்திலிருந்து முகலாயர் சுல்தான் பற்றிய பாடங்கள் நீக்கப்பட்டதற்கு  பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

இவ்வாறு மாற்றங்கள் செய்யப்பட்ட பாடப்புத்தகங்கள் 2025 - 26ஆம் கல்வியாண்டிற்கு உரியது எனக் கூறப்படுகிறது. மேலும் குப்தர்கள், சுங்கர்கள், சாதவாகனர்கள், சோழர்கள், சேரர்கள், பாண்டியர்கள் போன்ற பண்டைய ஆட்சி முறைகள் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனவும்  கூறப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்