Skip to main content

செக்யூலரிசம் என்றால் என்ன..? - உத்தவ் தாக்கரே அதிரடி பதில்!

Published on 28/11/2019 | Edited on 29/11/2019


மகாராஷ்டிர மாநில முதல்வராக இன்று மாலை பொறுப்பேற்ற உத்தவ் தாக்கரேயின் தலைமையிலான முதல் அமைச்சரவைக் கூட்டம், மும்பையில் உள்ள அரசு விருந்தினர் இல்லத்தில் இன்றிரவு நடைபெற்றது. உத்தவ் தாக்கரேவுடன் மாநில அமைச்சர்களாக பொறுப்பேற்று கொண்ட சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 6 அமைச்சர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இக்கூட்டத்துக்கு பின்னர், உத்தவ் தாக்கரே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, " புதிய அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தின் முதல் முடிவாக, சத்ரபதி சிவாஜி ஆட்சிக் காலத்தில் மகாராஷ்டிராவின் தலைநகராக இருந்த ராய்காட் நகரை மேம்படுத்த 20 கோடி ரூபாய் ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். சிவசேனா தலைமையிலான அரசு சிறப்பாக செயல்படும் என்பதை மாநில மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற முன்னுரிமை அளிக்கப்படும் என்று உத்தவ் தாக்கரே கூறினார்.

அப்போது, "சிவசேனா தற்போது மதச்சார்பற்ற கட்சியாகிவிட்டதா என செய்தியாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார். அதற்கு, "மதச்சார்பின்மை (செக்யூலரிசம்) குறித்து எங்களிடம் கேள்வியெழுப்புவர்கள் அதன் அர்த்தத்தை அரசியலமைப்புச் சட்டத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். அதாவது, மதச்சார்பின்மைககு நம் அரசியலமைப்பில் என்ன விளக்கம், வரையறை கொடுக்கப்பட்டுள்ளதோ, அதுதான் மதச்சார்பின்மை பற்றிய சிவசேனாவின் நிலைப்பாடு" என உத்தவ் தாக்கரே அதிரடியாக பதிலளித்தார்.


 

 


 

சார்ந்த செய்திகள்