உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்துவந்தது. மராட்டியத்தில் 19 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவாக மராட்டியத்தில் கரோனா பாதிப்பு அதிகப்படியாக இருந்துவந்தது. நேற்று 3,693 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 3,581 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,65,833 ஆக அதிகரித்துள்ளது. 50,386 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். மேலும், இன்று 57 பேர் மரணமடைந்துள்ள நிலையில் 52,876 பேர் கரோனா தொற்றால் மொத்தமாக மரணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 2,401 பேர் கரோனா தொற்று குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் குணமானவர்களின் எண்ணிக்கை 18,61,274 ஆக உயர்ந்துள்ளது.