Published on 18/10/2018 | Edited on 18/10/2018
மஹாராஷ்ட்ரா மாநிலம் ஹட்கோ பகுதியில் வசித்து வருபவர் கஜனன் கரத். இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு முன்னணி ஆன்லைன் நிறுவனத்தில் மொபைல் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்யப்பட்ட மொபைல் ஒரு வாரம் கழித்து ஆர்டர் செய்த நபருக்கு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆர்டர் செய்த கரத்துக்கு பார்சல் தரப்பட்டுள்ளது. வீட்டிற்கு வந்து பார்சலை பிரித்து பார்த்தவருக்கு ஷாக். பார்சலில் தான் ஆர்டர் செய்த மொபைல் இல்லமல், செங்கல் இருந்துள்ளது. உடனடியாக பதறியடித்துகொண்டு பார்சல் கொண்டுவந்த நிறுவனத்திடம் கால் செய்து கேட்டபோது, அவர்கள் கூலாக எங்களின் வேலை பார்சல் கொடுப்பதுதான் என்று கூறிவிட்டனர். ஒன்றும்புரியாத கரத் போலிஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுத்துள்ளார். போலிஸாரும் வழக்கு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.