மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி மற்றும் பிரச்சார கூட்டங்களை தாண்டி அதிர்ஷ்டத்தையும் கையில் எடுத்துள்ளது பாஜக.

உத்தரபிரதேச மாநிலம், கான்பூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் ஒரு மர நாற்காலியை ஒரு சிறிய கண்ணாடி அறையில் வைத்து பாதுகாத்து வருகிறார்கள். பாஜக வின் கணக்குப்படி இந்த நாற்காலியில் பிரதமர் நரேந்திர மோடி எப்போது அமர்ந்தாலும் அடுத்து வரும் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது.
அதனால் இந்த முறையும் பிரதமர் மோடி கான்பூர் பிரச்சாரத்தில் இந்த நாற்காலியில் அமர்வார் என கணிக்கப்படுகிறது. 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பும், 2017 உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலுக்கு முன்னும் மோடி அந்த நாற்காலியில் அமர்ந்து பொது கூட்டத்தில் பங்கேற்றார். அந்த இரண்டு தேர்தல்களிலும் பாஜக மிகப்பெரிய வெற்றி பெற்றது.
எனவே அதே சென்டிமென்டில் இந்த முறையும் பிரதமர் மோடியை அந்த நாற்காலியில் அமர வைத்தால் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றுவிடலாம் என பாஜக கட்சியினர் நம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த இரண்டு முறை அதிர்ஷ்டத்தை தந்த அந்த நாற்காலி இந்த முறையும் பாஜக வுக்கு அந்த அதிர்ஷ்டத்தை தருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.