மத்திய அரசின் ஆயுள் காப்பீடு நிறுவனமான எல்.ஐ.சி.யின் 5% பங்குகளை பொதுமக்கள் விற்பனைக்கு வெளியிட பங்குச்சந்தை ஒழுங்கு அமைப்பான செபி அனுமதி வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
எல்.ஐ.சி.யின் 5% பங்குகளை விற்பனை செய்து அதன் மூலம் 65,000 முதல் 85,000 கோடி ரூபாய்வரை நிதி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், மத்திய அரசு அந்த முடிவில் உறுதியாக உள்ளது. பங்கு வெளியீடு தொடர்பாக 650 பக்க விவர அறிக்கை செபி அமைப்பிடம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அதனை பரிசீலத்து எல்.ஐ.சி.யின் 5% பங்கு விற்பனைக்கான அனுமதியை செபி வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்.ஐ.சி பங்குகள் இந்த மாதம் விற்பனைக்கு வரப்படும் என்று கூறப்பட்ட நிலையில், ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் காரணமாக பங்குச்சந்தையில் நிலைவும் நிலையற்ற சூழலலைக் கருத்தில் கொண்டு இது தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. எல்.ஐ.சி பங்குகள் விற்பனை தேதி மற்றும் பங்கின் மதிப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.