Skip to main content

ஹத்ராஸ் சம்பவம்; தலைவர்கள் இரங்கல்!

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
leaders Condolences for Hathras Incident 

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற பகுதியில் இன்று (02.07.2024) ஆன்மிகக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா உரையாற்றினார். இவரது பேச்சைக் கேட்க ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதற்காக கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கினர். இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலரும் மயங்கி விழுந்துள்ளனர். இந்த சிக்கி குழந்தைகள், பெண்கள் என 122 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் சிக்கி காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கவும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக உயர்மட்டக்குழு விசாரணை செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் பிரதமர் மோடி ஹத்ராஸில் நடந்த விபத்தில் இறந்தவர்களின் உறவினர்களுக்குப் பிரதமரின் பொது நிவாரண நிதியில் இருந்து 2 லட்சம் ரூபாயும், இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாகப் பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். 

leaders Condolences for Hathras Incident 

அந்த வகையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, “உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் நடந்த விபத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமான பக்தர்கள் உயிரிழந்த செய்தி நெஞ்சைப் பதற வைக்கிறது. குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, “உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் நடந்த பயங்கர விபத்து குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் பேசினேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உத்தரப்பிரதேச அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. இதில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது அனுதாபங்கள். மேலும், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “ஹத்ராஸ் மாவட்டத்தில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விபத்தில் சிக்கி பலர் உயிர் இழந்தது மிகவும் வருத்தமாகவும், இதயத்தை உலுக்குவதாகவும் உள்ளது. பலரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். போர்க்கால அடிப்படையில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அமைச்சர்கள் லக்ஷ்மி நாராயண் சவுத்ரி ஜி, சந்தீப் சிங், தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் செல்லுமாறும் உத்தரவிட்டுள்ளது. 

leaders Condolences for Hathras Incident

ஆக்ரா காவல்துறையின் கூடுதல் இயக்குநர் மற்றும் அலிகார் போலீஸ் கமிஷனர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவிற்கு விபத்துக்கான காரணங்களை ஆராய அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களின் ஆன்மா ராமரின் காலடியில் சாந்தியடையவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் இறைவனை வேண்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் நடந்த இந்த கோர விபத்தால் நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துன்பத்தைத் தாங்கும் சக்தியைக் கடவுள் அவர்களுக்கு வழங்கட்டும். உள்ளாட்சி நிர்வாகம் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

leaders Condolences for Hathras Incident

மேலும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் எக்ஸ் தளத்தில், “உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் நடந்த விபத்து மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். மாநில அரசின் மேற்பார்வையில், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உள்ளாட்சி நிர்வாகம் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஹத்ராஸ் விரையும் ராகுல் காந்தி எம்.பி.! 

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
Rahul Gandhi MP travel Hathras

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற பகுதியில் நேற்று முன்தினம் (02.07.2024) ஆன்மிகக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா உரையாற்றினார். இவரது பேச்சைக் கேட்க ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதற்காகக் கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் நிகழ்ச்சி முடிந்த பின் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கினர். இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலரும் மயங்கி விழுந்தனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் என 121 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கவும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருந்தார். அதோடு இந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்டக்குழு விசாரணை செய்யவும் அவர் உத்தரவிட்டிருந்தார். அதே சமயம் பிரதமர் மோடி ஹத்ராஸில் நடந்த விபத்தில் இறந்தவர்களின் உறவினர்களுக்குப் பிரதமரின் பொது நிவாரண நிதியில் இருந்து 2 லட்சம் ரூபாயும், இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டிருந்தார். இந்தச் சம்பவத்திற்குக் காரணமான நான்கு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி எம்.பி., ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற உள்ளார். இதற்காக ராகுல் காந்தி நாளை (05.07.2024) உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் செல்ல உள்ளார். 

Next Story

“கடவுளால் அனுப்பப்பட்டவை என எதுவும் இல்லை” - குஷ்பூ

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
Khushboo said There is nothing like God-sent

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற பகுதியில் நேற்று முன்தினம் (02.07.2024) ஆன்மிகக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபாவின் பேச்சைக் கேட்க ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சி முடிந்த பின் மக்கள் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கினர். இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலரும் மயங்கி விழுந்து குழந்தைகள், பெண்கள் என 100க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்தனர். மேலும், இந்தச் சம்பவத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில், நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ இந்த சம்பவத்திற்கு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். இது குறித்து குஷ்பூ தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “ஹத்ராஸ் பேரழிவிலிருந்து மக்கள் எழுந்து வருவார்கள் என்று நம்புகிறேன். மேலும், கடவுளால் அனுப்பப்பட்டவை என எதுவும் இல்லை என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள் என்றும் நம்புகிறேன். 

உயர்ந்த சக்தியை நம்புபவர்கள் இதுபோன்ற விஷயங்களில் விழ மாட்டார்கள். கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார். நீங்கள் விடும் ஒவ்வொரு மூச்சிலும் அதை உணர்கிறீர்கள். இந்தப் பேரழிவைக் கடவுள் அனுப்பியிருக்க முடியாது. இந்தக் கூட்ட நெரிசலுக்குக் காரணமானவர்கள் ஒவ்வொருவரும் கைது செய்யப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் தங்களுடைய தவறான செயல்களுக்காகத் தண்டிக்கப்படும் போது தான், உண்மையாகவே ‘கடவுள் அனுப்பினார்’ என்ற வாசகம் நியாயப்படுத்தும்” என்று பதிவிட்டுள்ளார்.