Published on 09/11/2019 | Edited on 09/11/2019
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.7 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான தீர்ப்பை உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பின்படி, வக்பு வாரியத்திற்கு அவர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் எனவும், வழக்குக்கு உட்படுத்தப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கான அமைப்பை அடுத்த 3 மாதத்தில் மத்திய அரசு ஏற்படுத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள வக்பு வாரிய வழக்கறிஞர் ஜாபரியப் ஜிலானி, "நீதிமன்றத்தின் இந்த எங்களுக்கு திருப்தியை ஏற்படுத்தவில்லை. இருந்தாலும் நாங்கள் நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம். தீர்ப்பின் முழு விவரத்தை படித்தப்பின் சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து முடிவு செய்யப்படும்" எனவும் தெரிவித்துள்ளார்.