லஷ்கர் இ தொய்பா கமாண்டர் சுட்டுக் கொலை: பாதுகாப்பு படை அதிரடி
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் புல்வாமா மற்றும் காகபோரா பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது புல்வாமா பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதி ஒருவன் பாதுகாப்பு படையினரை கண்டதும் சுடத் தொடங்கினான்.
இதையடுத்து, பாதுகாப்பு படையினர் அதிரடியாக தாக்குதல் நடத்தினர். இந்த என்கவுண்டரில் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் கமாண்டர் அயூப் லெஹ்ரி சுட்டுக் கொல்லப்பட்டான். லஷ்கர் இ தொய்பா கமாண்டர் அயூப் லெஹ்ரி நீண்ட நாட்களாக தேடப்பட்டு வரும் தீவிரவாதி. அவரை சுட்டுக் கொன்றது தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலுக்கு கிடைத்துள்ள வெற்றி என ஜம்மு - காஷ்மீர் டிஜிபி வெய்ட் தெரிவித்துள்ளார்.