ஜம்மு காஷ்மீரில் நடந்த இராணுவ நடவடிக்கையில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதை விட, அப்பாவி மக்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அவர்மீது டில்லி நீதிமன்றத்தில் தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டுள்ளது. டில்லி நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சஷி பூஷண் அளித்துள்ள மனுவில், "காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் ஒரு டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில், இந்திய இராணுவம் ஜம்மு காஷ்மீரில் எடுத்த நடவடிக்கையில் பயங்கரவாதிகளைவிட பொது மக்கள்தான் அதிகமாக கொல்லப்பட்டுள்ளனர். அவரது இந்த பேட்டி இராணுவத்தை அவமதிப்பதாக உள்ளது. இந்த தேசத்துரோக நடவடிக்கையில் ஈடுபட்ட அவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு கொண்டுவரப்பட்டது.