இயற்கையின் படைப்பில் அடிக்கடி சில விசித்திர சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் இரட்டை தலையுடன் ஆடு ஒன்று பிறந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள சித்த துர்கா பகுதியில் விவசாய வேலை செய்பவர் ராயன். இவர் 10க்கும் மேற்பட்ட ஆடுகளை தன்னுடைய வீட்டில் வளர்த்து வருகின்றார். அதில் ஒரு ஆட்டுக்குட்டி இன்று குட்டியை ஈன்றுள்ளது.
ஆனால் அது வழக்கமான குட்டியை போன்று இல்லாமல் இரண்டு தலையுடன் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதன் உரிமையாளர் கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் வந்து சோதித்ததில் ஆடு இயல்புக்கு மாறான அமைப்புடன் இருப்பதால் விரைவில் மரணமடைய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார். இதனால் அவர் சோகமாக உள்ளார். அப்பகுதி பொதுமக்கள் அந்த ஆட்டை ஆச்சரியமாக பார்த்து செல்கிறார்கள்.