Skip to main content

‘தந்தம்’ கொண்ட பெண் யானை லட்சுமி உயிரிழப்பு; துக்கம் தாளாது கதறி அழுத பக்தர்கள்

Published on 30/11/2022 | Edited on 30/11/2022

 

Lakshmi, the female elephant with 'tusks' passed away in the Manakulam Vinayagar temple

 

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி திடீரென உயிரிழந்ததால் பக்தர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

 

மணக்குள விநாயகர் கோவில் புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலுக்கு 6 வயதில் வந்த லட்சுமி என்ற பெண் யானை 32 வயதில் தற்போது திடீரென உயிரிழந்ததால் பக்தர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

 

லட்சுமி என்ற பெண் யானைக்கு தந்தமும் இருந்ததால் விஷேசமான யானையாக பக்தர்களால் கருதப்பட்டது. சிறப்பு நாட்களில் காலில் கொலுசுடன் காணப்படும் லட்சுமி யானையை காண்பதற்காகவே சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் கோவிலுக்கு வருவார்கள். பல்வேறு சிறப்புகள் வாய்ந்த லட்சுமி யானை இன்று காலை நடைபயிற்சியின் போது காமாட்சி கோவில் அருகே திடீரென மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. 

 

தகவல் வேகமாக பரவியதும் பொதுமக்கள் அப்பகுதிகளில் கூடிவிட்டனர். பக்தர்கள் பூக்களைத் தூவி அஞ்சலி செலுத்தினர். யானையைக் கண்டதும் சிலர் கதறி அழுதது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. புதுச்சேரி அரசு யானை உயிரிழந்தது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

 

 


 

சார்ந்த செய்திகள்