Skip to main content

கொல்லம் நீட் சர்ச்சை - உண்மை கண்டறியும் குழு அமைப்பு

Published on 19/07/2022 | Edited on 19/07/2022

 

jk

 

நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு கடந்த 17ம் தேதி நடைபெற்றது. தமிழ், இந்தி உள்பட 13 மொழிகளில் நடந்த நீட் தேர்வை சுமார் 18.72 லட்சம் பேர் எழுத விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் கேரளாவில் கொல்லம் நகரில் நீட் தேர்வு எழுத வந்த மாணவி ஒருவரிடம் உள்ளாடையை களைய சொன்னதாக புகார் எழுந்தது. மாணவியின் புகாரின் பேரில் கேரள மாநிலம் கொல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், இது தொடர்பாக நீட் தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை அன்றே விளக்கமளித்திருந்தது.


இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள விளக்கத்தில், " கேரளாவில் நீட் எழுத வந்த மாணவியிடம் உள்ளாடையை களைய சொன்னதாக எந்த சம்பவமும் நடைபெறவில்லை. தேர்வின் பொழுதும், தேர்வுக்கு பின்னரும் எந்தவித புகாரும் கொடுக்கப்படவில்லை. நீட் தேர்வின் ஆடைக்கட்டுப்பாட்டு வழிகாட்டு நெறிமுறைகளில் இதுபோன்று கூறப்படவில்லை" என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில் இதுதொடர்பாக தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் கொண்ட குழுவை இதுதொடர்பாக விசாரிக்க மத்திய கல்வி அமைச்சகம் பணித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்