கேரள வருவாய் துறையின் ஆணையர் பொறுப்பிலிருந்தவர் ஸ்ரீராம் வெங்கட்ராமன் ஐ.ஏ.எஸ். திருமணமானவர் என்றாலும் சபலம் அவரை விட்டு வைக்கவில்லை. வாஃபா ஃபெரோஸ் என்பவரின் கணவர் வெளி நாட்டுப் பணியிலிருப்பதால், அவர் திவனந்தபுரத்தில் மாடலிங் தொழிலிருந்தவர். அவருடன் தொடர்புவைத்துக் கொண்ட ஸ்ரீராம் வெங்கட்ராமன் அவரைத் தன் காதலியாக வசப்படுத்தியிருக்கிறார்.
கடந்த 02.08.2019 அன்று திருவனந்தபுரம் ஐ.ஏ.எஸ். கிளப்பில் சக அதிகார ஐ.ஏ.எஸ்.களுடன் பார்ட்டியில் கலந்து கொண்டவர் அளவுக்கதிமான போதையிலிருந்திருக்கிறார். நடு இரவு 12.45 மணியளவில் தன் காதலி வாஃபா ஃபெரோஸை வரச் சொல்லி காரில் தன்னை வீட்டுக்குக் கொண்டு செல்லும்படி தெரிவிக்க, வந்த காதலியையும் பார்ட்டியில் ஐக்கியமாக வைத்தவர் பின் அவளுடன் காரில் கிளம்பியிருக்கிறார். அவரின் செம போதை நிலையக் கண்ட காதலி, தானே காரை ஒட்டுவதாகச் சொல்லியும் கேட்காத ஸ்ரீராம் வெங்கட்ராமன் போதையில் கண் மண் தெரியாமல் வேகக் கட்டுப்பாடு செய்யப்பட்ட மியூசியம் சாலையில் புயலாகக் காரைக் கிளப்பியிருக்கிறார். அது சமயம் மலையாள சிராஜ் பத்திரிகையின் முதன்மை நிருபரான முகம்மது பஷீர் இரவுப் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது அவரது பைக்கில் ஐ.ஏ.எஸ்.சின் கார் மோதியது. பைக்குடன் தூக்கி வீசப்பட்டதில் எதிரேயுள்ள பெரும் சுவரில் மோதியடிக்கப்பட்ட பஷீரின் ஆவி அந்த நொடியிலயே அடங்கியிருக்கிறது.
விபத்தால் வெலவெலத்துப் போன ஸ்ரீராம் வெங்கட் ராமன், தன்னுடைய போதை பற்றியும், விபத்தையும், தெரிவித்தவர் தன்னுடைய முழு லைப்பும் க்ளோஸாகி விடும். காப்பாற்றச் சொல்லி ஐ.ஏ.எஸ் கிளப்பில் மன்றாட, மறுகணம் கேரள ஐ.ஏ.எஸ்.களும், ஐ.பி.எஸ்.களும் கூட்டணி போட்டன. நிலைமைகள் தடம் புரள வைக்கப்பட்டன. மேலிடத்து உத்தரவுப்படி ஸ்பாட்டுக்கு வந்த மியூசியம் சாலை எஸ்.ஐ. அப்பாவி போல, வெங்கட்ராமனையும் அவர் காதலியையும், பக்கத்திலிருக்கும் ஹோட்டலுக்கு பத்திரமாக அனுப்பி வைத்தவர், ஓவர் நைட்டில் விபத்துக் பதிவு கடமையை முடித்தார்.
அடுத்த பக்கம் ஹோட்டலுக்குப் போன ஐ.ஏ.எஸ்., அங்கிருந்து அருகிலுள்ள ஸ்டார் அந்தஸ்தைக் கொண்ட (கிம்ஸ்) அந்த மருத்துவமனையில் அட்மிட் ஆகி, தன் உடலின் ரத்தத்தில் கலந்திருந்த ஆல்கஹால் முழுவதையும் அந்த ஸிம்டம் இல்லாத அளவுக்குக் காலிசெய்தவர், பின்பு தன் உடல் நிலை சரியில்லை என்று திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அட்மிட் ஆனார்.
விபத்து ஏற்பட்ட ஒரு சில நிமிடங்களில், குற்றவாளியை மருத்துவ சோதனைக்கு உட்படுத்த வேண்டிய காவல்துறை, விதியை வீசி விட்டு, ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். கூட்டணி திட்டப்படி செயல்பட்டு 34 மணி நேரம் கழித்து வெங்கட்ராமன் மீது வழக்குப் பதிவு செய்து கோர்ட் முன் நிறுத்தியது. அதே சமயம் போதை ஐ.ஏ.எஸ் தரப்பும், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதாடியது. குடித்து விட்டு வாகனம் ஒட்டி விபத்தை ஏற்படுத்தினார் வெங்கட்ராமன் ஐ.ஏ.எஸ். என அவர் காதலி வாஃபா. பெரோஸிடம் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த வாக்கு மூலத்தை வைத்து, ஜாமீன் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்தது போலீஸ் தரப்பு. அப்படி என்றால் ஆதாரமாக எங்கே மருத்துவச் சான்றிதழ் என்று கேட்ட நீதிபதியிடம், உதட்டைப் பிதுக்கியது போலீஸ். குடித்தவரை, மருத்துவ சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்ற அரிச்சுவடி கூடத்தெரியாதா என்று நீதி மன்றம் போலீசைப் பின்னியெடுத்தது. ஆதாரம் இல்லாததால் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. காலரைத் தூக்கி விட்டபடி கெத்தாக ஜாமீனில் வெளியே வந்தார் ஸ்ரீராம் வெங்கட்ராமன் ஐ.ஏ.எஸ்.
இந்த டிராமாக்களையும் விபத்தையும் கண்டு கொதித்துப் போன திருவனந்தபுரம் பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. நடந்த இந்த சம்பவத்தில் ஐ.ஏ.எஸ்.களின் திருகு வேலைகள் பற்றி ஏ.டூ.இஸட் முதல்வர் பினராய் விஜயனிடம் தெரிவித்திருக்கிறார் சுகாதாரத்துறை அமைச்சரான சைலஜா. ஐ.ஏ.எஸ். அமைப்பின் முணு முணுப்பையும் லட்சியப்படுத்தாமல் அரசு தண்டனையாக, போதை அதிகாரி ஸ்ரீராம் வெங்கட்ராமனை சஸ்பெண்ட் செய்தார் முதல்வர் பினராய்.
முதல்வரின் பணியிடை நீக்க உத்தரவு கடந்த 6 மாதமாக நீடித்த வேளையில், போதை ஐ.ஏ.எஸ். அதிகாரியைக் காப்பாற்ற மீண்டும் ஐ.ஏ.எஸ் கூட்டணி பின் புற வேலைகளைக் கச்சிதமாகவே செய்தது.
மத்திய அரசின் ஐ.ஏ.எஸ். பணியாளர்களுக்கான விதிமுறைகளின் படி, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஒரு அதிகாரி ஆறு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளலாம் என்று கோப்புகளை கூட்டணிகள் கேரள தலைமைச் செயலாளர் தோம் ஜோஸின் உதவியோடு தயார் செய்தனர். அத்துடன் ஸ்ரீராம் வெங்கட்ராமன் மீது போலீஸ் சைடில் சார்ஜ் ஜீட் ஃபைல் செய்யப்படாதவாறும் பார்த்துக் கொண்டார்கள்.
ஸ்ரீராம் வெங்கட்ராமனின் ஆறு மாதகால சஸ்பென்ஷனைச் சுட்டிக் காட்டிய தலைமைச் செயலாளர் தோம் ஜோஸ், விதிகளின்படி அவரை மீண்டும் பணியிலமர்த்திக் கொள்ளலாம் என்று கோப்பில் விரிவுரை எழுதி. ஃபைலை முதலமைச்சரின் ஒப்பதலுக்காக அவரது அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார். இவைகள் வெளியே தெரிந்தால் விஷயம் புயலைக் கிளப்பிவிடலாம் என்ற அச்சத்தில் அனைத்து நடவடிக்கைகளையும் ரகசியமாகவே வைத்துக் கொண்டனர்.
கோப்புக்களை ஆராய்ந்த முதல்வரின் அலுவலகம், சம்பவம் நடந்து ஆறுமாதம் கடந்தும் போலீஸ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்பதை முதல்வர் பினராய் விஜயனிடம் தெரிவித்திருக்கிறார்கள். அதே நேரம் இந்த நடவடிக்கைகள் கேரள பத்திரிகையாளர்களைக் கொதிக்க வைத்து விட்டது. அது விஷயத்தில் கடுமையான ஆட்சேபணையையும் கண்டனத்தையும் தெரிவித்திருக்கிறது. கேரள பிரஸ் கிளப்.
அனைத்தையும் அலசிப்பார்த்த முதல்வர் பினராய் விஜயன் தவறுக்குத் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும், மத்திய அரசுப் பணியாளர் என்றாலும் சட்டம் ஒன்று தான். தப்பு தப்புத்தான் என்று ஐ.ஏ.எஸ். அமைப்பின் கடுப்பையும் லட்சியப்படுத்தாமல் ஸ்ரீராம் வெங்கட்ராமனின் சஸ்பென்ஷனை நீட்டித்து உத்தரவிட்டிருக்கிறார்.
அத்துடன் நின்று விடாமல் டி.ஜி.பி. பெஹ்ராவை அழைத்த பினராய் விஜயன், தாமதம் செய்யாமல் போதை அதிகாரி கேஸில் சார்ஜ் ஜீட் தாக்கல் செய்யவும் உத்தரவிட, போலீஸ் குற்றப் பத்திரிகையைத் தற்போது தாக்கல் செய்துள்ளது.
ஏ1. ஸ்ரீராம் வெங்கட்ராமன் ஐ.ஏ.எஸ். ஏ2. அவரின் காதலி வா.பா பெரோஸ் இருவருமே குற்றவாளிகள். இரண்டு பேரும் போதையில் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு சாட்சியாக 20 ஆதாரங்களைக் கோர்ட்டில் சமர்ப்பித்திருக்கிறது தொடர்புடைய காவல் சரகம். சர்வ வல்லமை கொண்டவர்களே என்றாலும் குற்றம், குற்றமே என நடவடிக்கை எடுத்திருக்கிறார் சாமான்யரான முதல்வர் பினராய் விஜயன்.
முதல்வர் பினராய் விஜயன் சரியான நடவடிக்கை எடுத்திருக்கிறார். என்கிறார்கள் கேரள பத்திரிகையாளர்கள்.