மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா என இரண்டு மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் மஹாராஷ்டிராவில் 161 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது பாஜக கூட்டணி. பெரும்பான்மைக்கு தேவையானதைவிட அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது பாஜக.
இந்நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஹரியானாவில் 47 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியமைத்த பாஜக கூட்டணி, தற்போதைய வாக்கு எண்ணிக்கையில் 36 இடங்களில்தான் முன்னிலையில் இருக்கிறது. பெரும்பான்மைக்கு 46 தொகுதிகள் தேவை என்னும் நிலையில் பாஜக 38 இடங்களிலும் காங் கூட்டணி 33 இடங்களிலும் முன்னிலை வகிப்பதால் ஹரியானா தேர்தல் முடிவுகள் இழுபறியாக உள்ளன.
தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி-38, காங் கூட்டனி-33, பகுஜன் சமாஜ் கட்சி-1, இந்தியன் நேஷனல் லோக் தள்-1, ஜனயாக ஜனதா கட்சி-10, ஹரியானா லோகித் கட்சி-1, சுயேட்சை-6.
இந்நிலையில் காங்கிரஸ் ஹரியானாவில் ஆட்சி அமைப்பதற்காக ஜனயாக் ஜனதா கட்சியுடன் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சுயேட்சைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அவர்கள் அனைவரும் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தருவதாக கூறியிருக்கிறார்கள். சுயேட்சைகளுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஹரியானா முன்னாள் முதல்வர் புபிந்தர் சிங் ஹூடா தெரிவித்துள்ளார்.