Skip to main content

சிக்னல் கிடைக்காததால் வீட்டின் கூரையில் ஏறிய மாணவி... வைரலாகும் புகைப்படம்!

Published on 06/06/2020 | Edited on 06/06/2020
h



கரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த மூன்று மாதங்களாக திறக்கப்படவில்லை. இன்னும் ஒரு மாதத்திற்கும் மேலாக திறக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகின்றது. இதனால் மாணவர்களின் படிப்பு பாதித்துவிடக்கூடாது என்பதற்காக பள்ளிகள் மாணவர்களுக்கு இணைய வழி வகுப்புகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் கேரளாவில் இணையவழி வகுப்பில் நடைபெற்ற ஒரு சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


கேரள மாநிலம், கோட்டக்கலை அடுத்த அரீக்கல் பகுதியை சேர்ந்தவர் நமீதா. படிப்பில் படு சுட்டியான இவர் அருகில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.ஏ ஆங்கிலம் படித்து வருகின்றார். அவர் கடந்த ஒரு வாரமாக கல்லூரி நடத்தும் ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க அவர் தேர்ந்தெடுத்த இடம்தான் தற்போது அவர் செய்திகளில் அடிபட காரணமாக போய் உள்ளது. வீட்டில் எங்கும் சிக்னல் கிடைக்காத காரணத்தால் வீட்டின் ஓட்டின் மீது அமர்ந்து தினமும் சில மணி நேரம் பாடம் படித்துள்ளார். இதை சிலர் வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் பரப்பியுள்ளனர். இதை பார்த்த தனியார் இணைய தள நிறுவனம் அவருக்கு அதிக ஸ்பீடு கொண்ட இணைய இணைப்பு வழங்கியுள்ளது. அவரின் கடின முயற்சிக்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

 

சார்ந்த செய்திகள்