Published on 08/03/2020 | Edited on 08/03/2020
கரோனா தடுப்பு குறித்து மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா, "இத்தாலியில் இருந்து நாடு திரும்பிய பத்தினம் திட்டாவை சேர்ந்த 3 பேரிடம் இருந்து 2 பேருக்கு கரோனா பரவி உள்ளது. இவர்கள் ஐந்து பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதால், அவர்கள் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்றார். இதனால் இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34லிருந்து 39 ஆக அதிகரித்துள்ளது.