Published on 14/04/2021 | Edited on 14/04/2021

இந்தியாவில் கரோனா தீவிரமாகப் பரவி வரும் நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடந்த 8 ஆம் தேதி கரோனா உறுதியானது. இதனையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில், தற்போது அவர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளார்.
பினராயி விஜயனுக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில், அவருக்கு கரோனா தொற்று இல்லை எனத் தெரியவந்தது. இதனையடுத்து அவர் வீடு திரும்பியுள்ளார். கரோனாவிலிருந்து குணமடைந்துவிட்டாலும், அவர் ஒருவாரம் தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுவிட்டு, பிறகு தனது வழக்கமான பணிகளை மேற்கொள்ளவுள்ளார்.