கேரளாவில் தொடர்ந்து 30 ஆயிரத்தைக் கடந்து வந்த தினசரி கரோனா பாதிப்பு, கடந்த சில நாட்களாகச் சற்று குறைந்து வந்தது. கடந்த திங்கட்கிழமையன்று 19,688 பேருக்கும், நேற்றைய தினம் 25,772 பேருக்கும் கரோனா உறுதியானது.
இதனைத்தொடர்ந்து கேரளாவில் கரோனா உறுதியாகும் சதவீதம் (TPR) குறைந்து வருவதால், அமலில் இருந்த இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கும் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் நேற்று அறிவித்தார்.
இந்தநிலையில் கேரளாவில் மீண்டும் தினசரி கரோனா பாதிப்பு 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அம்மாநிலத்தில் 30,196 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட 181 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் நேற்று 15.87 ஆக இருந்த கரோனா உறுதியாகவும் சதவீதம், தற்போது 17.63% ஆக அதிகரித்துள்ளது.