அமித்ஷாவின் வீட்டிற்கு தில்லி முதல்வர் கெஜ்ரிவால் சென்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட தில்லி மாநில தேர்தல் சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் கருத்துக்கணிப்புகளில் சொல்லப்பட்டதை போன்றே ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு சாதகமாக இருந்தது. அக்கட்சியின் சார்பாக மூன்றாவது முறையாக முதல்வராக கெஜ்ரிவால் பதவியேற்றுக் கொண்டார். பாஜகவுக்கு எட்டு இடங்களும், ஆம் ஆத்மி கட்சிக்கு 62 இடங்களும் கிடைத்தன. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.
இந்நிலையில் முதல்வராக பதவியேற்ற கெஜ்ரிவால் இன்று தில்லியில் உள்ள அமித்ஷாவின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அரசியல் அரங்கில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிரெதிர் துருவங்களாக இருந்தவர்கள் எப்படி சந்தித்தார்கள் என்று பெரும்பாலானவர்கள் பேசிக்கொள்கிறார்கள். இந்நிலையில், இந்த சந்திப்பு திருப்தியாக இருந்ததாக தில்லி முதல்வர் கெஜ்ரிவால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.