ஜம்மு மாநிலம் கத்துவா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி, கடந்த ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி கடத்தப்பட்டார். ஏழு நாட்களுக்குப் பிறகு பிணமாக மீட்கப்பட்ட சிறுமி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, படுகொலை செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள், வழக்கை மூடிமறைக்க முயன்ற உள்ளூர் காவலர்கள் என ஏழு பேரின் வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
![kathua case verdict by punjab court](http://image.nakkheeran.in/cdn/farfuture/qWVcPZ7TNZ7NXN01H10P9RVWxb8wEekQz51P_tVOUBk/1560148888/sites/default/files/inline-images/kathua.jpg)
இதுதொடர்பான வழக்கு விசாரணை ஜம்முவின் கத்துவா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றவாளிகளுக்கு ஆதரவாக வந்த மிரட்டல்கள் காரணமாக பஞ்சாப் மாநிலம் பதான்கோட் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்துள்ள பதான்கோட் நீதிமன்றம் 6 பேர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தீர்பளித்துள்ளது. இந்த 6 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட நிலையில், இவர்களுக்கான தண்டனை குறித்து விவரங்கள் மாலை வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.