இந்த நூற்றாண்டில் முதன்முறையாக ஜூன் மாத வெப்ப மண்டல புயல் மஹாராஷ்ட்ராவை நோக்கி நகர்ந்து வருவதால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
வழக்கமாக ஜூன் 1-ஆம் தேதி கேரளாவில் தொடங்கும் தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டு 4 நாட்கள் தாமதமாகத் தொடங்கும் என இந்திய வானிலை மையம் கடந்த 15-ஆம் தேதி அறிவித்தது. அதன்படி தற்போது அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாற்றமடைந்து மஹாராஷ்ட்ரா மாநிலத்தை நோக்கி நகரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் புயல் காரணமாகக் கேரளாவின் பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புயல் மஹாராஷ்ட்ரா நோக்கிச் சென்றால், 1891ஆம் ஆண்டுக்குப் பிறகு அம்மாநிலத்தைத் தாக்கப்போகும் முதல் ஜூன் மாத வெப்ப மண்டலப் புயலாக இது இருக்கும் என வானிலை ஆய்வு மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புயல் பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் அம்மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, தேசிய பேரிடர் மீட்புப் படையின் (என்.டி.ஆர்.எஃப்.) 15 குழுக்கள் மஹாராஷ்ட்ராவின் மும்பை, ராய்காட், பால்கர், தானே மற்றும் ரத்னகிரியில் குவிக்கப்பட்டுள்ள.