Published on 19/02/2019 | Edited on 19/02/2019
புல்வாமா பகுதியில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 40 இந்திய துணை ராணுவ படையினர் கொல்லப்பட்ட நிலையில் காஷ்மீர் இளைஞர்கள் ராணுவத்தில் சேர ஆர்வம் காட்டுவது நாட்டு மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாரமுல்லாவில் ராணுவத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற்று வந்தது. 111 இடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் இந்த 111 இடங்களுக்கு காஷ்மீரை சேர்ந்த 2500 இளைஞர்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் ஆள்சேர்ப்பு முகாமிற்கு வந்த இளைஞர்கள் சிலர், “நம் நாட்டில் உள்ள மக்கள் மற்றும் நாட்டிற்காக பணியாற்ற எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் அதுவே போதும், அதைவிட வேறு என்ன வேண்டும்?” என கேள்வி எழுப்பியபடி தங்களின் தேர்வுக்கு சென்றுகொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.