ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்க அபராதத்துடன் கூடிய அவகாசம் இன்று (01/07/2022) முதல் அமலுக்கு வருகிறது.
பான் கார்டு எண்ணை ஆதாருடன் இணைக்க, கடந்த மார்ச் மாதம் 31- ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டது. பலமுறை ஏற்கனவே, அவகாசம் நீடிக்கப்பட்டுள்ள நிலையில், மார்ச் 31- ஆம் தேதிக்குள் இணைக்காதவர்களுக்கு 500 ரூபாய் அபராதத்துடன் ஜூன் 30- ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இது முடிவுக்கு வந்த நிலையில், இன்று (01/07/2022) முதல் ரூபாய் 1,000 அபராதமாக வசூலிக்கப்படவுள்ளது. அடுத்தாண்டு மார்ச் 31- ஆம் தேதி வரை, இந்த அபராதத்துடன் பான் எண்ணை ஆதாருடன் இணைக்க மத்திய நேரடி வரிகள் வாரியம் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது.
அதன் பிறகும் இணைக்காதவர்களின் பான் கார்டு எண்கள் முடக்கப்படும் எனத் தெரிகிறது. பான் கார்டு எண்ணை ஆதாருடன் இணைக்காதவர்கள் https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/bl-link-aadhaar என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.