இந்தியாவின் வடக்கில் அமைந்துள்ளது உத்தரகாண்ட் மாநிலம். ஏராளமான இந்துக்கள் புனிதயாத்திரை மேற்கொள்ளும் மாநிலமாகும். புனித பயணம் மேற்கொள்ளும் மற்ற மாநிலங்களை காட்டிலும் சிறந்த மாநிலம் உத்தரகாண்ட். இந்த மாநிலத்தில் தலைநகர் டேராடூன் ஆகும். இந்து சமயத் திருத்தலங்களான ரிஷிகேஷ், ஹரித்துவார், பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்திரி, யமுனோத்திரி ஆகியவையும் இந்த மாநிலத்திலேயே அமைந்துள்ளன. சமீபத்தில் கூட பிரதமர் நரேந்திர மோடி கேதார்நாத் பனி குகையில் சுமார் 18 மணி நேரம் தியானம் மேற்கொண்டார் எனபது குறிப்பிடத்தக்கது.
உத்தரகாண்ட் மாநிலம் முழுவதும் இந்து புனிதத் திருத்தலங்கள் நிறைந்து காணப்படுகிறது. இம்மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் முதல்வராக திரிவேந்திர சிங் ராவத் உள்ளார். அதனைத் தொடர்ந்து மாநிலத்தின் தலைநகரான டேராடூனில் பாஜக கட்சியின் தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் ஒரு பகுதியில் நூலகம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 2017- ஆம் ஆண்டு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இந்த நூலகத்தை திறந்து வைத்தார். இந்த நூலகத்தில் சிறப்பம்சங்கள் என்ன வென்றால், ராமாயணம் நூல், அனுமன் புராணம், பகவத் கீதை நூல்களுடன், இஸ்லாமிய புனித நூலான குரான் மற்றும் கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிள் வைக்கப்பட்டுள்ளது. இது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு காரணம் அம்மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத். சமூக நல்லிணக்கத்தை வளர்க்கும் வகையிலும், அனைத்து மக்களும் நூலகத்திற்கு வந்து படிக்கும் வகையில் நூலகம் அமைய வேண்டும் என முதல்வர் விரும்பியதாக உத்தரகாண்ட் பாஜகவின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதே போல் இந்த நூலகத்தில் கலாச்சாரம், புவியியல், அறிவியல், சமூக அறிவியல், புகழ் பெற்றவர்களின் வரலாறு புத்தகங்கள், கம்யூனிசம் புத்தகம் மற்றும் அனைத்து மதம் சார்ந்த புத்தகங்களும் வைக்கப்பட்டுள்ளனர். பாஜக கட்சி அனைத்து மதத்திற்கும் பொதுவானது என்பதை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வரும் அனைத்து மதங்களை பற்றி தெரிந்துக்கொள்ளும் ஒரு வாய்ப்பாக இந்த நூலகத்திற்கு வந்து படிப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.