நாடு முழுவதும் கரோனா தொற்று கணிசமாக உயர்ந்து வருகின்றது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது. பல மாநிலங்களில் பள்ளித்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. கல்லூரி தேர்வுகளும் ஒடிசா போன்ற போன்ற மாநிலங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பல மாநிலங்களில் ஆன் லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கர்நாடகாவில் எல்.கே.ஜி. முதல் 7ம் வகுப்பு மாணவர்கள் வரை ஆன் லைன் வகுப்புகள் எடுக்கப்படுவதாக மாநில அரசிடம் சிலர் புகார் அளித்தனர். இந்நிலையில் அம்மாநில அரசு தற்போது அத்தகைய பள்ளிகளுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதன்படி எல்கேஜி முதல் 7ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆன் லைன் வகுப்புகள் எடுக்கக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே இதேபோன்ற உத்தரவை தெலுங்கான மாநில அரசும் பிறப்பித்துள்ளது.