Skip to main content

மராட்டியம் தந்த தோல்விக்கு மருந்து போட்ட கர்நாடகா... மகிழ்ச்சியில் பாஜக!

Published on 09/12/2019 | Edited on 09/12/2019


கர்நாடக மாநிலத்தில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களின் தொகுதிகளில் டிசம்பர் 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, மாநிலத்தின் 15 தொகுதிகளுக்கு சில தினங்களுக்கு முன்பு இடைத்தேர்தல் நடைபெற்றது. பாஜக குறைந்தபட்சம் 6 இடங்களை கைப்பற்றினால் மட்டுமே ஆட்சியை தக்க வைத்து கொள்ள முடியும் என்ற நிலையில் தேர்தலை சந்தித்தது.



இந்நிலையில் கர்நாடகா இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலையில் தொடங்கியது. தேர்தல் நடைபெற்ற 15 இடங்களில் 12 இடங்களில் முன்னிலை பெற்று பாஜக தனது ஆட்சியை தக்க வைத்துள்ளது.  இதன் மூலம் கர்நாடகாவில் எடியூரப்பா தனது ஆட்சியை தக்கவைத்துக் கொண்டார். பெரும்பான்மைக்கு 6 இடங்களே தேவைப்பட்ட நிலையில் பாஜக 12 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜகவை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் 2 இடங்களில் முன்னிலையில் உள்ளது. குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 1 இடத்தில் முன்னிலை வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மராட்டியத்தில் ஆட்சி அமைத்து அது நான்கு நாட்கள் கூட நிலைக்காமல் கைவிட்டு போன சோகத்தில் இருந்த பாஜகவுக்கு கார்நாடக தேர்தல் வெற்றி உற்சாகத்தை கொடுத்துள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்