Skip to main content

"இந்தியா மீதான உலக பார்வை மாறிவிட்டது"- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

Published on 02/02/2022 | Edited on 02/02/2022

 

UNION BUDGET EXPLAIN BJP LEADERS PM NARENDRA MODI VIDEO VIA

 

பிரதமர் நரேந்திர மோடி இன்று (02/02/2022) காலை 11.00 மணிக்கு நாடு முழுவதும் உள்ள பா.ஜ.க. உறுப்பினர்களுடன் காணொளி மூலம் பேசினார். அப்போது, பட்ஜெட் குறித்து தொண்டர்களிடம் எடுத்துரைத்தார்.

 

பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது, "உலக நாடுகள் நமது இந்தியாவைப் பார்க்கும் பார்வை மாறிவிட்டது. அடுத்து நாம் காணவிருக்கும் உலகம் கரோனா காலத்திற்கு முன் இருந்ததுபோல் இருக்காது. பட்ஜெட் ஆவணங்கள் பெரிய அளவில் இருப்பதால் முழுதாக பட்ஜெட் உரையில் இடம் பெறவில்லை. சுயசார்பு இந்தியா மற்றும் நவீன இந்தியாவை உருவாக்க வேண்டியது மிகவும் அவசியமானது. மேலும், பல துறைகளில் புதிய உச்சத்தை எட்டுவதற்கு மத்திய நிதிநிலை அறிக்கையின் அறிவிப்புகள் வழிவகுக்கும். ஏழு ஆண்டுகளுக்கு முன் ரூபாய் 1.10 லட்சம் கோடியாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி தற்போது ரூபாய் 2.30 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது" எனத் தெரிவித்தார். 

 

இந்த நிகழ்வில், நாடு முழுவதும் உள்ள பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் மக்களவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் காணொளி மூலம் கலந்து கொண்டனர். 

 

சார்ந்த செய்திகள்